உள்ளூர் செய்திகள்

கொங்கணேஸ்வர சாமி கோவிலில் அன்னப்பூரணி அம்மன் இனிப்பு அலங்காரத்திலும், மூலை அனுமாருக்கு பாலாபிஷேகம் நடந்தது.

கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு

Published On 2023-11-13 15:37 IST   |   Update On 2023-11-13 15:37:00 IST
  • பல்வேறு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
  • அன்னப்பூரணி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தஞ்சாவூர்:

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொங்கணேஸ்வர சுவாமி கோவிலில் தீபாவளியை முன்னிட்டு அன்னப்பூரணி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தஞ்சை மேலவீதி மூலை அனுமாருக்கு தீபாவளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வடக்கு வீதியில் உள்ள ராஜகோபால சாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் அருள் பாலித்தார்.நீலமேக பெருமாள் கோவிலில் செங்கமல வல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Tags:    

Similar News