உள்ளூர் செய்திகள்

தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்த காட்சி.


பாவூர்சத்திரத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-03 14:23 IST   |   Update On 2022-10-03 14:23:00 IST
  • கலெக்டர் ஆகாஷ் குத்து விளக்கு ஏற்றி கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்,
  • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ.5. ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா பாவூர்சத்திரம் கதர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஆகாஷ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்து, முதல் விற்பனையை வாடிக்கையாளர்களிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியா ளர்களிடம் கலெக்டர் ஆகாஷ் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2021- 2022 ஆம் ஆண்டிற்கு ரூ.42.55 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.42.30 லட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் விற்பனை ரூ.41.59 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 605 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5. ஆயிரம் வீதம் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில் 10 சம தவணை களில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.46.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, காதி கிராப்ட் மேலாளர் ஹென்றி ஜோசப், மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் குமரேசன், கிராம தொழில் கூட்டுறவு அலுவலர் சரவணராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News