உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

திருச்செந்தூரில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2022-08-29 09:33 GMT   |   Update On 2022-08-29 09:33 GMT
  • கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற குழந்தை,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பேசினார்.
  • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள்குறித்தும் பேசினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற குழந்தை,நிதி ஆதரவுத்திட்டம்,ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல்,குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பேசினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள்குறித்தும் பேசினார்.

வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகை திருச்செந்தூர் வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன் தலைமையில் வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா,பொங்கலரசி,தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி,அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேரி, மற்றும் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News