உள்ளூர் செய்திகள்

வெற்றி கோப்பையுடன் மாணவ-மாணவிகள்.

தூத்துக்குடியில் வேலவன் வித்யாலயாவில் மாவட்ட அளவிலான தடகள போட்டி

Published On 2023-02-01 07:27 GMT   |   Update On 2023-02-01 07:27 GMT
  • தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் வேலவன் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது.
  • போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுப்பையா வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் வேலவன் வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகள் வேலவன் வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர்கள் தங்கவேல், அன்னபுஷ்பம் மற்றும் பள்ளித் தாளாளர் ஆனந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி அதிஷ்டராஜ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், அன்னை ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

நீலா சீபுட்ஸ், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, அன்னை ஜூவல்லர்ஸ் இப்போட்டி நடத்துவதற்கு பெரும் பங்களித்தனர். போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சுப்பையா வித்யாலயா பள்ளி முதல் இடத்தை பெற்று ஓட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றனர்.

தனிப்பட்ட வெற்றியாளருக்கான ஆண்கள் பிரிவில் முதல் பரிசை செயிண்ட் ஆன்ஸ் பள்ளியின் மாக்வின் ராய், 2-ம் பரிசை முறையே செயின்ட் தாமஸ் பள்ளியின் ஜெஸ்வின் பால் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் முதல் பரிசை செயின்ட் ஆன்ஸ் பள்ளியின் மது ரனிகா, 2-ம் பரிசை ஹோலி கிராஸ் பள்ளியின் ரேணுபாலா முறையே பெற்றனர். போட்டிகள் அனைத்தையும் சகிலா ஆனந்த் மேற்பார்வையில், வேலவன் வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள், ஆசரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News