உள்ளூர் செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பாராட்டு

Published On 2023-06-01 09:58 GMT   |   Update On 2023-06-01 09:58 GMT
  • இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம்.
  • பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

சீர்காழி:

சீர்காழியில் நடைபெற்ற மரபு சார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் இக்கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் சீர்காழி தாலுக்காவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் , என்.துளசிரங்கன் , ஏ.வரதராஜன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News