உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

Published On 2022-10-11 10:28 GMT   |   Update On 2022-10-11 10:28 GMT
  • கிராம புற மாணவ -மாணவியர்களுக்கான மாலை நேர கல்வி பண்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
  • மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் கிராம புற மாணவ -மாணவியர்களுக்கான மாலை நேர கல்வி பண்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பொன்னிரை, கனந்தங்குடி, வேளூர், வடபாதி ஆற்றங்கரை, மருதவனம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மையங்கள் திறப்பதற்கான இடங்களை மடத்தின் தலைவர் விமூர்த்தானந்த மஹராஜ் பார்வையிட்டார்.

மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவாரூர் ராமகிருஷ்ண சேவா சமிதி தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News