உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியல் பணம் எண்ணுவதில் தகராறு
- இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி மற்றும் சிலர் தங்களுக்கு தெரிவிக்காமல் எப்படி கோவில் உண்டியல் பணத்தை எண்ணலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் உண்டியல் பணம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, ராசு வீதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 11-ந் தேதி இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் உத்தரவுபடி அக்கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது.
அப்போது அங்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி மற்றும் சிலர் தங்களுக்கு தெரிவிக்காமல் எப்படி கோவில் உண்டியல் பணத்தை எண்ணலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் உண்டியல் பணம் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அளித்த புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.