உள்ளூர் செய்திகள்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை
- பொன்னேரியில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
- வாகனங்களில் சென்று முதல்வரை வரவேற்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
பொன்னேரி:
திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் சுறுசுறுப்பாக செய்துவருகின்றனர்.
அவ்வகையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் உத்தரவின் பெயரில் பொன்னேரியில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் முன்னிலையில் திமுக கட்சி அலுவலகத்தில் முதல்வர் வரவேற்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் பேருந்து, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று முதல்வரை வரவேற்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக ஆட்டோக்களில் பொதுக் கூட்டம் தொடர்பான விளம்பர நோட்டீஸ் ஒட்டப்பட்டது.