உள்ளூர் செய்திகள்

முகாமில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்

Published On 2022-11-26 12:29 IST   |   Update On 2022-11-26 12:29:00 IST
  • அனைத்து வங்கிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • 68 பயனாளிகளுக்கு கடன் வழங்கியது போல், மற்ற விண்ணப்பங்கள் மீதும் நடவடிக்கை.

நாகப்பட்டினம்:

பொருளாதார நெருக்கடி யின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம், கடந்த 28-ந் தேதி அன்று நடத்தப்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்ற அந்த முகாமில், மொத்தம் 304 மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து அதில் 68 பயனாளிகளுக்கு நேற்று 2.70 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், வங்கிகளை தேடி மாணவர்கள் அலைந்த நிலை மாற்றப்பட்டு, அனைத்து வங்கிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

விரைந்து செயல்பட்டு கடன் வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டுகள்.

கடன் பெற்ற மாணவர்கள் அதை பொறுப்புடன் திருப்பிச் செலுத்த வேண்டும். 68 பயனாளிகளுக்கு கடன் வழங்கியது போல், மற்ற விண்ணப்பங்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

விழாவில், மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்கெளதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகைமாலி எம்.எல்.ஏ மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News