உள்ளூர் செய்திகள்

பேரிடர் மேலாண்மை செய்முறை விளக்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை செய்முறை விளக்கம்

Published On 2022-06-23 09:13 GMT   |   Update On 2022-06-23 09:13 GMT
  • செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் தலைமையில் பேரிடர் மேலாண்மை செய்முறை விளக்கம் நடந்தது.
  • பேரிடர் காலங்களில் ஏற்படும் உயிர் ஆபத்துகளில் இருந்து மீட்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடத்தினர்.

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கந்தசாமி முன்னிலையில் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் தலைமையில் பேரிடர் மேலாண்மை செய்முறை விளக்கம் நடந்தது.

சிறப்பு நிலை அலுவலர் செல்வன் மற்றும் வீரர்கள் சந்திரமோகன், செந்தில்குமார், கோமதி சங்கர், ராஜா, இசக்கித்துரை ஆகியோர் கொண்ட குழுவினர் தாசில்தார் அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தென்மேற்கு பருவ மழையினால் ஏற்படும் பேரிடர் காலங்களில் தங்களையும் தங்களது உடமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது மற்றும் பிறருக்கு ஏற்படும் உயிர் ஆபத்துகளில் இருந்து அவர்களை எவ்வாறு மீட்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நடத்தினர்.

Tags:    

Similar News