உள்ளூர் செய்திகள்

டின்னர் செட்டுகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டி ரூ.4.1 லட்சம் மதிப்பிலான டின்னர் செட்டுகள்

Published On 2022-06-11 15:44 IST   |   Update On 2022-06-11 15:44:00 IST
  • ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு கல்விப் பணிகளில் தொடர்ந்து செய்து வருகிறது.
  • ரூ.4.1 லட்சம் மதிப்பிலான டின்னர் செட்டுகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கப்பரிசுகள், பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் அமைக்க உதவுதல் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு கல்விப் பணிகளில் தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த வகையில் 200 ஆண்டு காலமாகக் கல்விப்பணியில் சிறப்புற்று விளங்கி வரும் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மாண்ட்போர்ட் சபை சகோதரர்களால் வழி நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பணியாற்றும் 102 ஆசிரியர்களின் பணியைப் பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் ரூ.4.1 லட்சம் மதிப்பிலான டின்னர் செட்டுகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனர் பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் பாராட்டியதுடன் ஆசிரியப் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி என்னும் வகையில் ஆசிரியப் பெருமக்கள் மேன்மேலும் தங்கள் பணியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும், அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பணியைச் சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Similar News