உள்ளூர் செய்திகள்

தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள்.

திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் தபால் அனுப்பும் போராட்டம்

Published On 2023-09-29 13:29 IST   |   Update On 2023-09-29 13:29:00 IST
  • சாலை பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்கள் என அங்கீகரித்து ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும்.
  • திண்டுக்கல் தலைமை தபால் நிலயைத்தில் முதல்-அமைச்சர், பொதுப்பணி த்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு நெடுஞ்சாலை த்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டார கிளை தலைவர் சேகர் தலைமையில் மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் திண்டுக்கல் தலைமை தபால் நிலயைத்தில் முதல்-அமைச்சர், பொதுப்பணி த்துறை அமைச்சர் ஆகி யோருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மனுவில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்தவர்களின் வாரிசு களுக்கு நெடுஞ்சாலைத் துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்கள் என அங்கீகரித்து ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும். 10 சதவீத ஆபத்து படி, சீருடை சலவை படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என குறிப்பிட ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News