உள்ளூர் செய்திகள்

அலுவலக வளாகத்தில் தேங்கி உள்ள கழிவு நீர்.

திண்டுக்கல் : மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

Published On 2023-08-09 06:18 GMT   |   Update On 2023-08-09 06:18 GMT
  • மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கி குளம் போல் நிற்கிறது.
  • நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கோட்டை குளம் சாலையில் அமைந்துள்ளது மேற்கு வட்டாட்சியர் அலுவலகம். இங்கு கோட்ட கலால் அலுவலகம், உணவு பாதுகாப்பு அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் அலுவலகம், முத்திரைத்தாள் திருத்தல் கட்டண தனி வட்டாட்சியர், உதவி சார் கருவூலம், நில அளவை பிரிவு, இ-சேவை, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என 250 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இங்கு நாள்தோறும் பட்டா மாறுதல், வாக்காளர் அட்டை புதுப்பித்தல், புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கி குளம் போல் நிற்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவ தால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூக்கை பொத்திக் கொண்டு பணி செய்யும் நிலை ஏற்பட்டு ள்ளது.

கொசுக்கள் உற்பத்தி மையமாகவும் மற்றும் விஷ ஜந்துக்கள் உறைவிடமாகவும் வட்டாட்சியர் அலுவலகம் மாறியுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆதார் மற்றும் இ சேவை மையங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் வந்து செல்கி ன்றனர்.

துர்நாற்றத்தில் பொதுமக்கள் கடந்து செல்லும் அவலம் உள்ளதா கவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் முறையான கழிப்பறை வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News