உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2023-05-08 07:37 GMT   |   Update On 2023-05-08 07:37 GMT
  • அம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
  • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த நாணல்திடல் மாரியம்மன் கோயிலில் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.

நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு, பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவையொட்டி காருடையான்பள்ளம் வீரசோழன் ஆற்றங்கரை யிலிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் மற்றும் காவடிகளை வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் வந்து கோயிலை அடைந்தனர்.

அப்போது கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டம் எதிரே மாரியம்மன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்த ருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சேனைத் தலைவர் மகாஜன சங்க தலைவர் முனுசாமி, நாட்டாண்மை இளங்கோவன் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.

Tags:    

Similar News