உள்ளூர் செய்திகள்

குழந்தையுடன் பக்தர் ஒருவர் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி. 

மாவுரெட்டியில் மகா மாரியம்மன் கோவில் தீமிதி விழா

Published On 2023-04-25 07:16 GMT   |   Update On 2023-04-25 07:16 GMT
  • மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது.
  • ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது. இதில் ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி மறுக்காப்பு கட்டி அம்மனுக்கு நாள்தோ றும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

நேற்று காலை பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். மாலை அம்மன் கோவில் முன்பு இருந்த தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இன்று மாலை பொங்கல், மாவிளக்கு மற்றும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவ டைகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Tags:    

Similar News