உள்ளூர் செய்திகள்

தீமிதி திருவிழா நடந்தது.

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-08-09 15:46 IST   |   Update On 2022-08-09 15:48:00 IST
  • கோவிலில் சக்கரவர்த்தி கோட்டையும் அதனை தொடர்ந்து அம்பாள் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.
  • நாதஸ்வர இசையுடன் அம்பாள் பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது.

சுவாமிமலை:

கும்பகோணம் சாரங்க பாணி கோவில் கீழவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சக்கரவர்த்தி கோட்டையும் அதனை தொடர்ந்து அம்பாள் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் பொம்மலாட்டம், சந்தன காப்புஅலங்காரம், நாதஸ்வர இசையுடன் ஸ்ரீ அம்பாள் பல்லாக்கில் வீதி உலாவும் நடந்தது. வருகிற 12-ந்தேதி இரவு சுத்தாபிஷேகம், காளியம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் அமுத படையல் நிகழ்ச்சி நடைபெ றுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நினைவில் வாழும் செல்வம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News