பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். (சிறப்பு அலங்காரத்தில் திரவுபதை அம்மன்).
திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- விரதமிருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
- 7-ந் தேதி திரவுபதை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உடையார்பாளையம் மகேந்தி ரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடந்தது. தொடர்ந்து, கடந்த 5ந் தேதி அரவாண் களப்பலியும், 6-ந் தேதி அர்ச்சுணன் தபசும், 7-ந் தேதி படுகள நிகழ்ச்சியும், பின், திரவுபதை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர், மாலை திரவுபதை அம்மன் பரிவார தேவதைகளுடன் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று, அக்னி குண்டம் முன்பு நிறுத்த ப்பட்டது.
பின், விரதமிருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனா்.
முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.
அன்னதான பணியில் கிராமமக்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டனர். இதில் வேதாரண்யேஸ்வரா் கோவில் ஆதீனவித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளமும் வாசிக்கப்பட்டது.
மேலும் சிவன், பார்வதி உள்பட பல்வேறு சுவாமி வேட மணிந்து இளைஞர்களில் வீதிஉலாவின் போது வலம் வந்தனர்.