உள்ளூர் செய்திகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் ஆய்வு மேற்கொண்ட காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உள்ளார்.

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி ஆய்வு

Published On 2022-12-14 15:06 IST   |   Update On 2022-12-14 15:06:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
  • அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி மற்றும் ராஜ காளீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி மற்றும் ராஜ காளீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தடைய அறிவியல் பிரிவு, மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு, தனிப்பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் பல்வேறு தற்கொலை வழக்குகளை, போலீசார் கொலை வழக்குகளாக கருதி விசாரணை மேற்கொள்ளும்போது, தடைய அறிவியல் பிரிவு சம்பவ இடங்களில் சேகரித்த பொருட்களின் ஆய்வு அடிப்படையில் தற்கொலை என்பதை உறுதி செய்து கொடுத்துள்ளதை அறிந்த டி.ஐ.ஜி அந்த பிரிவில் உள்ளவர்களை பாராட்டினார்.

மேலும் தனிப்பிரிவு போலீசார், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கப் போகும் முன்பே தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவித்ததை சுட்டிக்காட்டி பாராட்டிய டி.ஐ.ஜி, மேலும் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தினார். மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவையும் ஆய்வு மேற்கொண்ட டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ், ஆவணங்களை முறைப்படுத்துவது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

இன்று காலையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு பணிகளை டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News