பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
- விசாரணையில் ஜானகி காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர் கார்த்திக்குடன் செல்வதாக கூறியதை அடுத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(27) என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜானகி(23) என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் செயல்படும் தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு இடையே 2 ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த 15 நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் லளிகம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெண்ணின் பெற்றோர்கள் பெண்ணை காணவில்லை என்றும் , கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் இருவேறு சமூகம் என்பதாலும் தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து இருவரையும் எஸ்.பி. கலைச்செல்வன், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பிடத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜானகி காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர் கார்த்திக்குடன் செல்வதாக கூறியதை அடுத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் தஞ்சமடைந்தது வருவது குறிப்பிடத்தக்கது.