கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. அதனை படத்தில் காணலாம்.
தருமபுரி, கிருஷ்ணகிரியில் 3-வது நாளாக மழை கொட்டியது
- மழைநீர் சாலையில் பெருக்கு தாழ்வான பகுதிக்கு மழை நீர் ஓடியது.
- உழவர் சந்தை வளாகத்தில் மழைநீர் வெளியேற்ற முடியாமல் குளம்போல் தேங்கின.
தருமபுரி,
வெப்ப சலனம் காரண மாகவும் கடந்த 2 தினங்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில் நேற்றுமாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய விட்டு விட்டு மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.
பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் இந்த மழை பெய்துள்ளது.
இதனால் தருமபுரி நகரம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், பென்னா கரம், ஒகேனக்கல், பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் இடி மின்ன லுடன் மழை பெய்தது.
இந்த மழையால் பல இடங்களில் அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தருமபுரி நகரில் அதிகாைல பெய்த இந்த மழைநீர் சாலையில் பெருக்கு தாழ்வான பகுதிக்கு மழை நீர் ஓடியது.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகே சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இேதபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழை ெபய்துள்ளது. இதனால் ராயக்கோட்டை, நெடுங்கல், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், தேன்கனி க்கோட்டை, அஞ்செட்டி, பெலுகொண்டபுரம், சூளகிரி, கல்லாவி, மத்தூர், சிங்காரபேட்டை உள்பட இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி சந்தையில் தேங்கும் மழைநீர்
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மொத்தம் 72 கடைகள் உள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
உழவர் சந்தையில் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் வழி வகை செய்யப்பட்டிருந்தது. உழவர் சந்தையின் அருகே கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க லிமிடெட் மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டது.
குளிர்பதன கிடங்கு கட்டிய பொழுது உழவர் சந்தையில் இருந்து மழைநீர் வெளியேறும் பகுதியை அடைத்து விட்டனர். இதனால் உழவர் சந்தை வளாகத்தில் மழைநீர் வெளியேற்ற முடியாமல் குளம்போல் தேங்கின. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதா னத்தில் மழை நீர் தேங்கி யது. இதனால் பள்ளி மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.