உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் பெய்த சாரல் மழையில் நனைந்தபடி சென்ற மக்கள்.

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 24 மில்லி மீட்டர் மழைப்பொழிவு

Published On 2022-11-25 15:04 IST   |   Update On 2022-11-25 15:04:00 IST
  • அரூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.
  • தொடர் சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம் பள்ளி, கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது.

மேலும் மழை விட்டு, விட்டு பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் தொடர் சாரல் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நேற்று தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி- 2 மில்லி மீட்டர், பாலக்கோடு- 6 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி- 10 மில்லி மீட்டர், ஒகேனக்கல்- 2 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி- 4 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 24 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News