தருமபுரி மாவட்டம் பிறந்த நாளை முன்னிட்டு புதிய 3 ஆல்பம் பாடல்கள் வெளியீட்டு விழா
- தருமபுரி மாவட்ட பிறந்த நாளையொட்டி புதிய பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- மாவட்டத்தின் சிறப்பு குறித்து பாடல்கள் எழுதப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலுவலக அரங்கத்தில் கடந்த 1-ந் தேதி தருமபுரி மாவட்ட எழுத்தாளர்கள் எழுதிய புதிய 3 ஆல்பம் பாடல் வெளியீடு விழா மற்றும் பாடல்கள் அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுதாகர், புலவர் ராமசாமி, அரிநாத், குமார், அரிநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் சம்பத் தலைமை தாங்கினார். புலவர் ராமசாமி முன்னிலை வகித்தார். தகடூர் குணசேகரன், ஆசிரியர் பயிற்றுநர் எழுதிய பாடல் வரிகள், ஒருங்கிணைப்பில் தருமபுரி சிறப்பு ஆல்பம் புதிய வீடியோ பாடல் வரிகளுடன் வெளியீடு செய்யப்பட்டது.
இந்த பாடல்களில் தகடூர் எனும் தருமபுரி குறித்து பல உண்மை தகவல்களை பதிவு செய்து தருமபுரியின் பெரு மையை புதிய தலைமுறை யினர், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளை–ஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் நாட்டின் வரலாறு என பல்வேறு சிறப்புகளை குறித்து குணசேகரன் எழுதிய 2-வது பாடல் வெளியிடப்பட்டது.
விழாவில் அரங்க முருகேசன் எழுதிய தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழ் நாட்டின் சிறப்பு கூறும் புதிய ஆல்பம் பாடல் வெளியீடும் நடைப்பெற்றது. இப்பாடல் சங்கத்தமிழில் உள்ள சிறப்புகளை மற்றும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை கூறுகிறது.
இப்பாடல்களை திரைப்பட பின்னணி பாடகர்கள் மகாலிங்கம், ஜெய், சபிதா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு அருள்மணி இசையமைத்துள்ளார். இப்பாடல்களை தேவிகுணா தயாரித்து வழங்கியுள்ளார்.
பாடல்களின் இசைத்தட்–டுக்களை அரிமா சங்க நிர்வாகிகள் இனாயத்துல்லா, வஜ்ஜீரவேல், எழுத்தாளர் புனித வள்ளி, திரைப்பட நடிகர் கமலேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் படைப்பாளர் பேரவை மற்றும் மாவட்ட எழுத்தா–ளர்கள் செய்திருந்தனர்.