உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகில் உள்ள காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமணா சாமி, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தருமபுரி, கிருஷ்ணகிரி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2023-01-02 15:32 IST   |   Update On 2023-01-02 15:32:00 IST
  • சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
  • சொர்க்கவாசல் வழியாக வரதராஜ பெருமாள் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தருமபுரி, 

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

பூக்கலால் அலங்க ரிக்கபட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமேத பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசுதேவ சுவாமியை வனங்கி வழிபட்டனர்.

அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது.

தருமபுரி சுற்றுள்ள கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.

சொர்க்க வாசல் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

இதேபோல காரிமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காரிமங்கலம் கடைவீதி, அக்ரஹாரம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.

பின்னர் 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்று சென்றனர்.

மேலும் இன்று மாலை 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், நாளை துவாதசி சிறப்பு பூஜையும் நடக்கிறது.

சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

அரூர்

அரூர் பரசுராமன் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிரதானமாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழா. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இன்று அதிகாலை சொக்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும் சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து வரதராஜ பெருமாளை பக்தர்கள் தூக்கி கோவிலை சுற்றி வந்து சொர்க்கவாசல் வழியாக வரதராஜ பெருமாள் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயணா சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

பூக்கலால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் ஸ்ரீ லட்சுமி நாராயணார் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வனங்கி வழிபட்டனர். அதனை தொடர்ந்து திருவீதி உலா நடைபெறுகிறது.

அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது. அதகபாடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். 

Tags:    

Similar News