உள்ளூர் செய்திகள்

போலீசார் மதுப்பாட்டில்களை அழித்த காட்சி

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 988 மது பாட்டில்கள் அழிப்பு

Published On 2023-10-20 13:16 IST   |   Update On 2023-10-20 13:16:00 IST
  • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • இளங்கோவன், தலைமை போலீசார் ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்குப்பம் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் அருகே உள்ள பாரில் சட்ட விரோதமாக 988 மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ரமேஷ் முன்னிலையில் 988 மது பாட்டில்களை கொட்டி அழிக்கப்பட்டது. இதில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், நயினார் பாளையம் தீயணைப்பு வீரர்கள் குமரவேல், ஹரிதாஸ், இளங்கோவன், தலைமை போலீசார் ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News