உள்ளூர் செய்திகள்
தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சை - மயிலாடுதுறை ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
- தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ரெயில் வழக்கமாக புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்றது.
- திட்டைக்கும், பண்டாரவாடைக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையத்தின் வழியாகவும், தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ரெயில் (எண்:06874) வழக்கமாக புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்று வந்தது. இந்த ரெயில் புறப்படக்கூடிய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திட்டைக்கும், பண்டாரவாடைக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தஞ்சை-மயிலாடுதுறை ரெயில் காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 11.40 மணிக்கு புறப்படும்.
இந்த மாதம் (ஜனவரி) முழுவதும் இதே நேரத்தில் தான் புறப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.