சட்டைநாதர் கோவிலில் எதாஸ்தானம் புறப்பாடு நடந்தது.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் எதாஸ்தானம் புறப்பாடு
- 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது.
- 100 கிலோ மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து மண்டலபிஷேகம் பூர்த்தி விழா மூன்று நாட்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிறைவு நாளான நேற்று காலை முத்து சட்டநாத சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக எதாஸ்தானத்தி லிருந்து முத்து சட்டை நாதர் சுவாமி புறப்பாடாகி உற்சவம் மண்டபம் எழுந்தருளி சிறப்பு ஆராதனை நடந்தது.
பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் குத்து சட்டை நாதர் சுவாமி எதார்த்தம் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது . தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு நாதஸ்வர மேளக்கச்சே ரியுடன் சுவாமி பிரகார விழா நடந்தது .
தொடர்ந்து முத்து சட்டை நாதர் சுவாமி சதாஸ்தானம் எழுந்தருளி 100 கிலோ மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்று, பின்னர் மகா தீபாராதனை நடந்தது.
இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார், தொழி லதிபர் மார்கோனி சியாமளா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிதரன், திருக்கோயில்கள் பாதுகாப்பு பேரவை செய லாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.