உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-27 15:09 IST   |   Update On 2023-03-27 15:09:00 IST
  • காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ்பாபு, தொகுதி தலைவர் சதாம் உசேன், நகர தலைவர் நிதீஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கவியரசன், சென்னப்பன், மாரியப்பன் ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் கலந்து கொண்டார். சேவாதளத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.

இதில், ராகுல்காந்தி மீது அவதூறுபரப்பி தண்டனை பெற்றுத்தரக் காரணமாக இருந்த பாஜக அரசைக் கண்டித்தும், அவர் பதவியை பறிக்கக் காரணமானவர்களைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News