உள்ளூர் செய்திகள்

ட்ரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ட்ரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு குறித்து செயல்விளக்கம்

Published On 2023-07-04 09:47 GMT   |   Update On 2023-07-04 09:47 GMT
  • 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம்.
  • ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

திருநாகேஸ்வரம்:

கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ட்ரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

நேரடி நெல் விதைப்பின் முக்கியத்துவத்தையும், நெல் சாகுபடி முறையில் ஏற்படக்கூடிய ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ட்ரோன் தொழில்நுட்பம் மிகச்சிறந்தது.

மேலும், 45-50 கிலோ விதையை பயன்படுத்தி 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம். களைகளை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

இதில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பழனிச்சாமி, இயக்குனர் ரகுநாதன் மற்றும் கமலஹாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உளவியல் இணை பேராசிரியர் இளமதி செய்திருந்தார்.

Tags:    

Similar News