உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் தமிழ்நாடு சத்துணவுப் பணியாளா் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்
- மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனா்
ஊட்டி
ஊட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவுப் பணியாளா் சங்கத்தினா் மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விஜயா தலைமை தாங்கினாா்.
இதில் பங்கேற்றோா் கூறுகையில், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும், அனைத்து சத்துணவு ஊழியா்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தால் உடனே பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும், தமிழக முதல்வா் அறிவித்துள்ள காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை தமிழக அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனா்