உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

வீ.கே.புதூரில் வி.ஏ.ஓ.கொலையை கண்டித்து அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-27 08:51 GMT   |   Update On 2023-04-27 08:51 GMT
  • வி.ஏ.ஓ.கொலையை கண்டித்து வீ.கே.புதூர் தாசில்தார்அலுவலகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியின் பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து

வீ.கே.புதூர் தாசில்தார்அலுவலகத்தின் முன்பு தாசில்தார் தெய்வ சுந்தரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மணல் மாபியா கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்க வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் துணை தாசில்தார், அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News