ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
களக்காடு:
பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ஆன் லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுனர் ரவியை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் களக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா மற்றும் அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, மூலைக்கரைப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.