உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.



கூட்டுறவு கடன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-05 13:22 IST   |   Update On 2023-10-05 13:22:00 IST
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என வற்புறுத்தல்.
  • இதையடுத்து சாணார்பட்டி கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக கனரக வாகனம் மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என வற்புறுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாணார்பட்டி பகுதியில் செயல்படும் 16 கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த செயலர்கள், அலுவலர்கள் சுமார் 80 பேர் அச்சங்கத்தின் சாணார்பட்டி பகுதி செயலாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ் தலைமையில் சாணார்பட்டி கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இப்பகுதியில் கூட்டுறவு சங்க வழக்கமான பணிகள் நடைபெறாமால் பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், நகை கடன் பெற்றவர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News