மாமல்லபுரம் அருகே மின் கம்பத்தில் தொங்கிய ஆண் சடலம்- போலீஸ் விசாரணை
- மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டனர்
- சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100அடி தூரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி பகுதியில், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு ராணுவ பாதுகாப்புடன் மூலப்பொருட்களை கொண்டு செல்லும் முக்கிய பாதுகாப்பு நுழைவு வாயிலில் உள்ளது. இதன் அருகே 110-வோல்டேஜ் கொண்ட உயர் மின் வழித்தடம் உள்ளது. அதன் மின் கம்பத்தில் 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று காலை பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சடலத்தை மின் கம்பத்தில் இருந்து பாதுகாப்பாக இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவ மணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? தற்கொலை செய்தாரா? என்ன காரணம்? என மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100அடி தூரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.