உள்ளூர் செய்திகள்

குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published On 2022-09-09 12:15 GMT   |   Update On 2022-09-09 12:15 GMT
  • அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும்.
  • நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குரூப்-1 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News