உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் சுற்றித்திரியும் மாடுகள்.

திண்டுக்கல் : ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

Published On 2023-07-14 09:39 GMT   |   Update On 2023-07-14 09:39 GMT
  • மாடுகள் அவிழ்த்துவி:டுவதால் சாலையோரம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன.
  • கால்நடைகள் தண்டவாள த்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே அனுமந்தநகர், மேற்கு மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் அவிழ்த்து விடுகின்றனர்.

அந்த மாடுகள் சாலையோரம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன. மேலும் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு பண்டகசாலையின் முன்பாக கால்நடைகள் கூட்டம் கூட்டமாக போக்கு வரத்துக்கு இடையூறாக திரிகிறது.

இந்த நிலையில் அங்கு சிதறி கிடக்கும் உணவுகளை கால்நடைகள் உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளை யும் சேர்த்து உண்பதால் கால்நடைகளுக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் தண்டவாள த்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாள ங்களில் கால்நடைகளை சுற்றி திரிய விடும் மாட்டின் உரிமை யாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News