மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள ஆபத்தான விளம்பர பலகை.
ஒட்டன்சத்திரம் நகரில் மின் கம்பங்களில் கட்டப்படும் விளம்பர பலகைகளால் ஆபத்து
- கம்பங்களில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் விளம்பர பலகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் அதிக அளவில் விளம்பர தட்டிகள் கட்டப்பட்டு ள்ளன. இதனால் அவசர தேவைக்கு ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறும் போது சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகரில் உள்ள 18 வார்டு களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு விளக்கு மின் கம்பங்கள் உள்ளன.
இந்த கம்பங்களில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் விளம்பர பலகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த மின் கம்பத்தில் கட்டப்படும் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் விளரம்பர தட்டிகளை அகற்றாமலேயே உள்ளன.
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.