உள்ளூர் செய்திகள்

சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்படும் காட்சி.

பள்ளங்கள் தோண்டப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-05-12 08:24 GMT   |   Update On 2023-05-12 08:24 GMT
  • நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.
  • இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.

இந்த சாலையின் ஒருபுறம் நெடுஞ்சாலை துறை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியார் நிறுவனத்தின் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

சாலையின் நடுவில் மட்டும் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதை உள்ளது.

இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணிகளை நிறுத்த வலியுறுத்தி வாகனங்களை சிறை பிடித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், திட்டச்சேரி போலீஸ் சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை,டென்னிசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவா ர்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.

பின்னர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் மூடப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News