உள்ளூர் செய்திகள்

பலவஞ்சிபாளையத்தில் வாகன ஓட்டிகள் பாதிப்பு

Published On 2022-12-26 04:16 GMT   |   Update On 2022-12-26 04:16 GMT
  • குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
  • புதிதாக சாலை போட்ட பின்பு அதனை‌ தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

வீரபாண்டி : 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையத்தில் இருந்து கோவில் வழி செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். பலஆண்டுகளாக மோசமாக இருந்த சாலை கடந்த 5மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். அந்த நிம்மதி நிரந்தரமாக நீடிக்கவில்லை.

தற்பொழுது அந்த பகுதிகளில் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

பலவஞ்சிபாளையத்திலிருந்து கோவில்வழி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிக மிக மோசமாக இருந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை போடப்பட்டது. தற்பொழுது குடிநீர் குழாய் பாதிப்பிற்காக தோண்டப்பட்டு இருக்கிறது.

பல இடங்களில் இப்படித்தான் பணியை மேற்கொள்கின்றனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணியை முறையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக சாலை போட்ட பின்பு அதனை‌ தோண்டுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது உரிய முறையில் கவனம் செலுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.  

Tags:    

Similar News