உள்ளூர் செய்திகள்
கையெழுத்து இயக்கம் நடத்த சிலிண்டர் டெலிவரிமேன்கள் முடிவு
- சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
- புதிய உறுப்பினர் சேர்க்கை என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
அவிநாசி :
அவிநாசியில் தமிழ்நாடு அனைத்து எல்.பி.ஜி., சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி தொழிற்சங்கத்தை வலுப்படுத்துவது, மார்ச் 20ந்தேதியிலிருந்து 30ந் தேதிக்குள் கோவை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி பொதுமக்களின் ஆதரவை பெறும் நிகழ்ச்சியை தொடங்குவது,மார்ச் 30 -ந்ேததி முதல் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம், ஏப்ரல் 15 முதல் 30-ந் தேதிக்குள் திருப்பூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.