உள்ளூர் செய்திகள்

குடிநீர் பழுப்பு நிறத்தில் வருவதை படத்தில் காணலாம்.

கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம்

Published On 2022-08-02 08:26 GMT   |   Update On 2022-08-02 08:26 GMT
  • கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருகிறது.

கடலூர்: 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து கடலூர் மையப்பகுதிகளில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சரவணநகர், நாராயண நகர், விஜயதாஸ் நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், கேசவன் நகர், முத்தையா நகர், அம்பேத்கர் நகர், மார்க்கெட் காலனி தானம் நகர், நவநீதம் நகர், குமரன் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருவதாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. மேலும் வருங்காலங்களில் மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நீக்க தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News