உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சி மேயர் கணவர் சென்ற கார் பயங்கர விபத்து:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Published On 2023-07-12 14:51 IST   |   Update On 2023-07-12 14:51:00 IST
  • தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும்தி.மு.க. நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
  • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடலூர்:

கடலூர் மாநகர தி.மு.க.செயலாளராக ராஜா இருந்து வருகிறார். இவரது மனைவி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு கடலூரில் இருந்து திருச்சி நோக்கி மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும்தி.மு.க. நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரி ஒன்று எதிர்பாராமல் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சென்ற கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

அப்போது இவர்களுடன் மற்றொரு காரில் வந்ததி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து காரில் இருந்த ராஜா மற்றும் நிர்வாகிகளை சென்று பார்த்த போது அனைவரும் லேசான காயத்துடன் தப்பியது தெரிய வந்தது.. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்து உருக்குலைந்தது. இதனைத் தொடர்ந்து மேயர் கணவர் தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கடலூருக்கு இன்று அதிகாலை வந்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்டதி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் கணவர் ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News