உள்ளூர் செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் கிறிஸ்தவ ஆயரை தாக்கி கொலை மிரட்டல்: கவுன்சிலர் கணவர் கைது

Published On 2023-01-10 13:44 IST   |   Update On 2023-01-10 13:44:00 IST
  • கிறிஸ்தவ ஆலயம் முன்பு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை கொட்டி சென்றதாக கூறப்படுகிறது.
  • செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து திடீரென்று ஆயர் பிலிப் ரிச்சர்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் துறைமுகத்தில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று கிறிஸ்தவ ஆலயம் முன்பு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பையை கொட்டி சென்றதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கிறிஸ்தவ ஆலய ஆயர் பிலிப் ரிச்சர்ட் என்பவர் துப்புரவு ஊழியர்களிடம் இது சம்பந்தமாக கேட்டபோது, கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் செந்தில் எங்களிடம் குப்பை கொட்ட சொன்னதாக கூறினார்கள்.

இது தொடர்பாக பிலிப் ரிச்சர்ட், செந்தில் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து திடீரென்று ஆயர் பிலிப் ரிச்சர்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் பிலிப் ரிச்சர்ட் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags:    

Similar News