உள்ளூர் செய்திகள்

விடுதலையான கைதிகளுக்கு மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், பாதிரியார் கனகராஜ் ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.

கடலூர் மத்திய சிறையில் 10 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுதலை

Published On 2022-08-25 09:32 GMT   |   Update On 2022-08-25 09:32 GMT
நன்னடத்தை வெளியில் வந்த நபர்களுக்கு மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.

கடலூர்:

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மத்திய சிறைச்சாலை உள்ள 10 கைதிகள் நன்னடத்தை காரணமாக இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்‌.இதனை தொடர்ந்து 10 பேரின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியுடன் வெளியில் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் காலை நன்னடத்தை காரணமாக 10 நபர்கள் வெளியில் வந்தனர். அப்போது அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து நன்னடத்தை வெளியில் வந்த நபர்களுக்கு மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.

இதனை தொடர்ந்து நன்னடத்தை காரணமாக வெளியில் வந்த நபர்கள் இனி வருங்காலங்களில் சரியான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி எந்தவிதமான குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News