உள்ளூர் செய்திகள்

ஜார்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்பு

Published On 2023-02-18 02:00 GMT   |   Update On 2023-02-18 02:00 GMT
  • ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • சென்னையில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.

சென்னை :

ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதற்காக நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது வைத்து உள்ள பாசத்துக்கு தந்துள்ள பெருமைக்குரிய பரிசாக இதை பார்க்கிறேன். உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் பெருமையை உலகம் உணர்கின்ற வகையில் அங்கு வாழும் ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுவதுதான் குறிக்கோளாக இருக்கும். ஜார்கண்ட்- தமிழகம் இடையே பாலமாக இருக்க பதவி ஏற்றபின் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News