பெரிய நாயக்கனூர் கோவிலில் மாடுகள் பூ தாண்டும் போட்டி
- வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அப்பநாயக்கனூர் ஊஞ்சதோப்பு பெரிய நாயக்கனூர் கோவிலில் மாடுகள் பூ தாண்டும் போட்டி நேற்று நடைபெற்றது.
- தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வேப்பமரத்தூர், அப்பநாயக்கனூர் மற்றும் காளிநாயக்கனூர் ஆகிய 3 கிராமங்களில் இருந்து 3 காளை மாடுகள் கலந்து கொண்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அப்பநாயக்கனூர் ஊஞ்சதோப்பு பெரிய நாயக்கனூர் கோவிலில் மாடுகள் பூ தாண்டும் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வேப்பமரத்தூர், அப்பநாயக்கனூர் மற்றும் காளிநாயக்கனூர் ஆகிய 3 கிராமங்களில் இருந்து 3 காளை மாடுகள் கலந்து கொண்டது.
கோவில் முன்பு உள்ள பகுதியில் சுமார் 100 அடி தூரத்திற்கு காளை மாடுகள் ஓடவிடப்படும். இந்த பூ தாண்டுதல் போட்டியில் முதலில் வரும் மாட்டை சாமி மாடாக கருதி, அதற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துவது வழக்கம்.
நேற்று நடைபெற்ற பூ தாண்டும் போட்டியில், முதலாவதாக வந்த வேப்பமரத்தூரை சேர்ந்த சாமி காளை மாட்டுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பூ தாண்டு–தல் போட்டியைக் காண சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.