உள்ளூர் செய்திகள்

தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.

தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-06-02 15:38 IST   |   Update On 2023-06-02 15:38:00 IST
  • 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
  • இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News