உள்ளூர் செய்திகள்

ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய கோரி கவுன்சிலர்கள் பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கினார்கள்.

பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் மீது கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்

Published On 2023-08-08 15:14 IST   |   Update On 2023-08-08 15:14:00 IST
  • சமீப காலங்களில் ஒகே னக்கல் வளர்ச்சி நிதியை சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மறைமுக ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள முறைகேடு செய்துள்ளார்.
  • இதனால் பா.ம.க. கவுன்சிலர்களே பா.ம.க. தலைவரை நீக்க கோரி மனு அளித்ததால் பென்னா கரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. 6, அ.தி.மு.க. 7, பா.ம.க. 4, சி.பி.எம், 2 என மொத்தம் 19 கவுன்சிலர்கள் உள்ளனர்.

ஒன்றிய குழு தலைவராக பா.ம.க.வை சேர்ந்த கவிதா ராமகிருஷ்ணன் உள்ளார். இதில் தி.மு.க, அ.தி.மு.க, சி.பி.எம், பா.ம.க உள்ளிட்ட 17 ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மனு வழங்கினார்கள்.

அந்த மனுவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியி ருப்பதாவது:-

ஒன்றிய குழு தலைவர் கவிதா, ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச் சையாக செயல்படுகிறார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற் கொள்ளப்படும் நலத்திட்டங்கள், மக்கள் பணிகளை முறைக்கேடாக வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் சேர்ந்து ஒப்பந்தங்கள் குறித்து யாருக்கும் தெரி யாமல் ஒருதலைபட்சமாக அவரது கணவர் பெயரிலும் தனக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரர்களை வைத்து மேற்கொள்கிறார்.

சமிபகாலங்களில் ஒகே னக்கல் வளர்ச்சி நிதியை சுமார் ரூ.2 கோடிக்கு மேல் மறைமுக ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள முறைகேடு செய்துள்ளார்.

அப்படி வழங்கப்படும் பணிகள் அனைத்தும் அவரது கணவர் அதிக கமிஷன் கேட்டு பெறுவதால் தரமற்ற வேலைகளையே ஒப்பந்த தாரர்கள் செய்கின்றனர்.

மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் ஒதுக்கப்படும் பொது நிதி மற்றும் 15-வது நிதிமானியம் உட்பட அனைத்து திட்ட பணிகளும் ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலும், ஆலோ சனைகள் மேற்கொள்ளா மலும் தீர்மானங்கள் இன்றி ஒன்றிய குழு தலைவர் முறைகேடு செய்துள்ளார்.

ஆகவே, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து உள்ளோம். எனவே உடனடியாக சிறப்பு கவன ஈர்ப்பு கூட்டம் ஏற்பாடு செய்து நம்பிக்கை யில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

இதனால் பா.ம.க. கவுன்சிலர்களே பா.ம.க. தலைவரை நீக்க கோரி மனு அளித்ததால் பென்னா கரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News