உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.

பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-06-29 09:56 GMT   |   Update On 2022-06-29 09:56 GMT
  • அரசு சார்பில் நடத்தப்பட்ட பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர். உடனே சம்பவ இடத்திற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், விற்பனை குழு செயலாளர் சுரேஷ் பாபு, கண்காணிப்பாளர் தாட்சாயினி, துணை கண்காணிப்பாளர் பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் திருக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

வருகிற வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் ஏலம் நடத்தப்படும் என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News