உள்ளூர் செய்திகள்

கடலூரில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு

Published On 2022-07-15 09:09 GMT   |   Update On 2022-07-15 09:09 GMT
  • கடலூரில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர்.

கடலூர்:

அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடலூர் மாநகராட்சி சாலை ஓரத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது அ.தி.மு.க.வினர் வாகனத்தை மறித்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

Tags:    

Similar News