உள்ளூர் செய்திகள்

1,530 மையங்களில் 36-வது ெகாரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-09-11 09:14 GMT   |   Update On 2022-09-11 09:14 GMT
  • பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் குறைவான நபா்களே செலுத்திக் கொண்டுள்ளனா்.
  • மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை:

ெகாரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முதன்மை ஆயுதமாக இருந்து வரும் ெகாரோனா தடுப்பூசி அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் 2021 செப்டம்பா் முதல் மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் வாரம்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் கடந்த சில மாதங்களாக மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.இந்நிலையில், தமிழகம் முழுவதும் 36-வது ெகாரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 340 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தமாக 1,530 மையங்களில் மெகா ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் முதல், 2-வது மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 99 சதவீதத்துக்கு மேற்பட்டவா்களும், 2-வது தவணை தடுப்பூசிகளையும் 98 சதவீதத்துக்கு மேற்பட்டவா்களும் செலுத்திக் கொண்டுள்ளனா். ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் குறைவான நபா்களே செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மெகா ெகாரோனா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். செப்டம்பா் 30-ந் தேதி வரை மட்டுமே 18 முதல் 59 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பூஸ்டர் ெகாரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News